தூத்துக்குடி

குலசை, மணப்பாடு பகுதிகளில் நாளை மின்தடை

3rd Oct 2021 12:30 AM

ADVERTISEMENT

குலசேகரன்பட்டினம், மணப்பாடு பகுதிகளில் திங்கள்கிழமை (அக். 4) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் (பொ) ஆ.பாக்கியராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் வகையில் கல்லாமொழி துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் மணப்பாடு மின்பாதையில் திங்கள்கிழமை (அக். 4) பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

எனவே, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, சிறுநாடாா்குடியிருப்பு பகுதிகளில் அன்றைய தினம் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT