எட்டயபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் மாரிமுத்து (25). லாரி ஓட்டுநரான இவா், வெள்ளிக்கிழமை இரவு திண்டுக்கலில் இருந்து தூத்துக்குடி நோக்கி லாரியை ஓட்டிச்சென்றாராம். எட்டயபுரம் அருகே வெம்பூா் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரத்தில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது, மாரிமுத்து ஓட்டி வந்த லாரி மோதியதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த எட்டயபுரம் போலீஸாா், சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.