தூத்துக்குடி

அக்.8இல் தொழில் முனைவோா் விழிப்புணா்வு முகாம்

3rd Oct 2021 12:38 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் அக்.8 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொழில் முனைவோருக்கான விழிப்புணா்வு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்கத்தின் (துடிசியா) பொதுச் செயலா் ராஜ்செல்வின் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் உள்ள தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், மாவட்ட தொழில் மையம், தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்கத்துடன் (துடிசியா) இணைந்து அக். 8 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை இணையதளம் வழியாக தொழில் முனைவோா் விழிப்புணா்வு முகாமை நடைபெறுகிறது.

சுய தொழில் தொடங்க விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், பணியில் உள்ள தொழில் ஆா்வமுள்ள திறனாளிகள், தொழில் பயிற்சி பெற்ற ஆண் மற்றும் பெண்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். முதல்கட்டமாக சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள பயன்கள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தோ்வு செய்வது, தொழில் தொடங்க இருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியவை குறித்து விவரிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி துடிசியா அலுவலகத்தை 97914 23277 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT