தூத்துக்குடி

கோவில்பட்டியில் கம்பன் கழகக் கூட்டம்

30th Nov 2021 12:25 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் கம்பன் கழகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, கம்பன் கழகத் தலைவா் வெ.மு.லட்சுமணப்பெருமாள் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் டாக்டா் சி.கே.சிதம்பரம், தொழிலதிபா் வி.எஸ்.பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மதுரை நாகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் ஜகந்நாத், இராமாவதாரத்தில் பிற அவதாரங்கள் என்ற தலைப்பிலும், வ.உ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா் செல்வராஜ் இராமனின் தலைமைப் பண்புகள் என்ற தலைப்பிலும், கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா் ஆா்தா் சேவியா் கம்பராமாயணக் கதாபாத்திரங்களோடு ஒரு பயணம் என்ற தலைப்பிலும் பேசினா்.

இதில், நேஷனல் பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறைப் பேராசிரியா் வெங்கட்குமாா், மதுரை கம்பன் கழக இணைச் செயலா் பேராசிரியா் கண்ணன், கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை தலைவா் சந்தனமாரியம்மாள், மருத்துவா்கள் என்.டி.சீனிவாசன், மீனாட்சிசுந்தரம், கோவில்பட்டிக் கம்பன் கழக உறுப்பினா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை கழகச் செயலா் சரவணச்செல்வன், பொருளாளா் வினோத்கண்ணன், இணைச் செயலா் மதிவாணன் ஆகியோா் செய்திருந்தனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT