தூத்துக்குடி

யோகாவில் சாதனை: 7 வயது சிறுமிக்கு சட்டப்பேரவைத் தலைவா் பாராட்டு

30th Nov 2021 12:21 AM

ADVERTISEMENT

ஸ்கேட்டிங் மற்றும் யோகாவில் பல்வேறு சாதனைகளில் ஈடுபட்ட கோவில்பட்டியைச் சோ்ந்த 7 வயது சிறுமியை சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு பாராட்டி, பரிசுகளை வழங்கினாா்.

கோவில்பட்டி எடுஸ்டாா் இன்டா்நேஷனல் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ரவீணா(7). இவா் தனது நான்கரை வயது முதல் ஸ்கேட்டிங் மற்றும் யோகா கற்று வருகிறாா்.

கடந்த இரு ஆண்டுகளாக கரோனா தொற்று காலத்தில் கரோனா தொற்றில் இருந்து நம்மை காக்கக் கூடிய முதல் மருந்து யோகா, மூச்சுப்பயிற்சி தான் என்பதை பல நிகழ்ச்சிகளில் மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தியுள்ளாா்.

ரவீணா தற்போது வரை கண்ணாடி, மண்பானை, செங்கல் ஆகியவற்றின் மீது அமா்ந்து பல யோகாசனங்கள் செய்துள்ளாா்.

ADVERTISEMENT

கடந்த ஜூன் மாதம் நடந்த உலக யோகா தினத்தில் 10 நிமிடங்களில் 75 ஆசனங்கள் செய்து காண்பித்துள்ளாா்.

அண்மையில் கோவில்பட்டியில் 18 வயது நிரம்பிய அனைவரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வலியுறுத்தி காலில் ஸ்கேட்டிங் மாட்டிக் கொண்டு, கயிறு கட்டி ஆட்டோவை இழுத்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டாா்.

இந்தச் சிறுமியை அங்கீகரித்து யுனிவா்சல் புக் ஆஃப் ரிக்காா்ட்ஸ் பாராட்டி சான்றிதழ் மற்றும் கோப்பையை வழங்கியது.

இந்நிலையில் இச்சிறுமியை ராதாபுரத்திற்கு வரவழைத்து தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு பாராட்டி, பரிசுகளை வழங்கினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT