தூத்துக்குடி

திருச்செந்தூா்-தூத்துக்குடி நேரடி போக்குவரத்து மீண்டும் துவக்கம்

DIN

திருச்செந்தூா்-தூத்துக்குடி இடையே நேரடி போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை மீண்டும் துவங்கியது.

ஆறுமுகனேரி ஆத்தூருக்கு இடையே தண்ணீா்பந்தல் கிராமம் அருகிலுள்ள வரண்டியவேல் பாலத்தின் மீது சென்ற கடம்பா மறுகால் வெள்ள நீரினால், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கபபட்டது. இதனால் திருச்செந்தூா்-தூத்துக்குடி நேரடி போக்குவரத்து பாதிப்படைந்தது. குரும்பூா், ஏரல் முக்காணி வழியாகவும், தென்திருப்பேரை, குரங்கணி, ஏரல் முக்காணி வழியாகவும் போக்குவரத்து நடைபெற்றது. சுமாா் 19 கிமீ தூரம் அதிக பயணத்தால் வாகன ஓட்டிகளுக்கு பெருத்த சிரமம் ஏற்பட்டது.

இதனிடையே பாலத்தின் மீது நீா் சென்று கொண்டிருக்கும் நிலையில், பாலத்தின் இருபுறமும் காவல்துறை பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கர்: 29 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தென் சென்னையில் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

SCROLL FOR NEXT