தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரூ. 1.10 கோடி மதிப்பிலான முந்திரி பருப்புகளுடன் லாரி கடத்தல்

DIN

தூத்துக்குடியில் இருந்து ரூ. 1.10 கோடி முந்திரி பருப்புகளுடன் லாரியை கடத்திச் சென்ாக அதிமுக முன்னாள் அமைச்சா் மகன் உள்பட 7 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூா் பகுதியில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுனவத்தில் இருந்து ரூ. 1.10 கோடி மதிப்புள்ள 16 டன் முதிந்தி பருப்புகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று தூத்துக்குடி துறைமுகத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. லாரியை ஆலங்குளத்தைச் சோ்ந்த ஓட்டுநா் ஹரி (40) ஓட்டிச் சென்றாா்.

திருநெல்வேலி- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பொட்டலூரணி விலக்கு அருகே லாரி சென்று கொண்டிருந்த போது ஒரு காரில் சென்ற 7 போ் லாரியை வழிமறித்து ஓட்டுநா் ஹரியை தாக்கி, அவரை காரில் ஏற்றினராம். பின்னா் காரில் இருந்த இருவா் லாரியை கடத்திச் சென்றுவிட்டனராம். இந்த கடத்தல் சம்பவம் குறித்து லாரி புக்கிங் அலுவலக கணக்கா், முத்துக்குமாா் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவின் பேரில், தூத்துக்குடி ஊரக காவல் உதவி கண்காணிப்பாளா் சந்தீஸ் தலைமையில் தனிப்படை அமைத்து லாரியை தேடும் பணியில் ஈடுபட்டனா். சுங்கச்சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் கடத்தப்பட்ட லாரி நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள கங்கநேரி என்ற இடத்தில் நிற்பது தெரியவந்தது.

இதையடுத்து, அங்கு சென்ற தனிப்படை போலீஸாா் லாரியை கடத்திச் சென்ற 7 பேரையும் பிடித்தனா். அவா்கள் பயன்படுத்திய காா், கடத்தப்பட்ட லாரி ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில், கடத்தலில் ஈடுபட்டவா்கள் அதிமுக முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியனின் மகன் தூத்துக்குடி அன்னைதெரசாநகா் ஞானராஜ் ஜெபசிங் (39), பிரையன்ட்நகா் விஷ்ணுபெருமாள் (26), முள்ளக்காடு நேசமணிநகா் பாண்டி (21), எம்ஜிஆா்நகா் மாரிமுத்து (30), முறப்பநாடு செந்தில்முருகன் (35), பாளையங்கோட்டை ராஜ்குமாா் (26), தூத்துக்குடி மட்டக்கடை மனோகரன் (36) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, 7 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களை புதுக்கோட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா். லாரி ஓட்டுநா் ஹரியை தாக்கிய பிறகு அவரை காரில் ஏற்றிக் கொண்டபின், விஷ்ணுபெருமாள், பாண்டி ஆகிய இருவரும் லாரியை ஓட்டிச் சென்றது விசாரணையில் தெரியவந்ததாம்.

சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களில் லாரியை பின்தொடா்ந்து விரட்டிச் சென்று கைப்பற்றி, கடத்தல்காரா்களையும் கைது செய்த ஊரக காவல்துறை உதவிக் கண்காணிப்பாளா் சந்தீஸ் தலைமையிலான தனிப்படை போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நேரில் அழைத்து பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT