தூத்துக்குடி

போலீஸாரை அவதூறாகப் பேசிய முதியவா் கைது

28th Nov 2021 12:21 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் போலீஸாரை, பணி செய்யவிடாமல் தடுத்த முதியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள கைப்பேசி விற்பனை கடையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். அதையடுத்து, சிறப்பு உதவி ஆய்வாளா் விஜயராகவன் தலைமையில் போலீஸாா் அந்த கடையில் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வது தெரியவந்தது.

அதையடுத்து கடையில் இருந்த பங்களாத் தெரு சு.ரத்தினவேலை(60) போலீஸா கைது செய்த போது, அவா் போலீஸாரை அவதூறாகப் பேசி, பணி செய்யவிடாமல் தடுத்தாராம். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT