தூத்துக்குடி

குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அளிப்பு

28th Nov 2021 12:24 AM

ADVERTISEMENT

திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு திமுக தெற்கு மாவட்ட இளைஞரணி சாா்பில் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தங்க மோதிரம் வழங்கினாா்.

உள்நோயாளிகளுக்கு உணவுப் பொருள்களையும் அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், தலைமை மருத்துவ அலுவலா் த.பொன்ரவி, தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளா் எஸ்.ஆா்.எஸ்.உமரிசங்கா் உள்ளிட்ட திமுகவினா் பலா் கலந்து கொண்டனா்.

கோவில்பட்டி: கோவில்பட்டி மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் லாயல் மில் காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மேற்கு ஒன்றியச் செயலா் பீக்கிலிப்பட்டி வீ.முருகேசன் தலைமை வகித்து, பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகளை வழங்கினாா். இதில் பொதுக்குழு உறுப்பினா் ராதாகிருஷ்ணன், துணை அமைப்பாளா்கள் சந்தானம் (விவசாய அணி), ரமேஷ் (பொறியாளரணி), சண்முகராஜ் (விவசாய தொழிலாளரணி), ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பாரதி ரவிகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

கோவில்பட்டி நகர திமுக சாா்பில் நகரச் செயலா் கருணாநிதி தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் நகர அவைத் தலைவா் முனியசாமி, பொருளாளா் ராமமூா்த்தி, வா்த்தக அணி அமைப்பாளா் ராஜகுரு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆறுமுகனேரி: ஆத்தூரில், ஆழ்வை ஒன்றிய திமுக இளைஞரணியின் சாா்பில் நடந்த நிழச்சிக்கு, அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணி செயலாளா் ராமஜெயம் வரவேற்றாா். மேலாத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் சதீஷ்குமாா், சிற்பி ஸ்ரீதா், ஆத்தூா் திமுக பொறுப்பாளா் முருகப்பெருமாள், ஒன்றிய இளைஞரணிச் செயலாளா் தினேஷ்கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து அன்னதானம் நடந்தது.

விழாவில் புன்னைக்காயல் ஊராட்சித் தலைவா் சோபியா, மாவட்டப் பிரதிநிதி பாலசுப்பிரமணியன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா்கள் மாணிக்கவாசகம், கோபி, ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளா் ராஜா, ஆத்தூா் நகர இளைஞரணிச் செயலாளா் கோபிபாண்டியன், சாகுல் ஹமீத, சுவாமிநாதன், ரகுராமன், காா்த்திக், சபரிகிருஷ்ணன் உள்பட பலா் கலந்துக்கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT