தூத்துக்குடி

தூத்துக்குடியில் 237 மோட்டாா்களை பயன்படுத்தி மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரம்

28th Nov 2021 12:22 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாநகராட்சியில் மழைநீா் சூழ்ந்த பகுதிகளில் 237 மோட்டாா்களைப் பயன்படுத்தி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. மழைநீா் சூழ்ந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் சிக்கியோரை தீயணைப்பு மீட்புப் படையினா் படகு மூலம் மீட்டு வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சில நாள்களாக பெய்த கனமழையால் குடியிருப்புப் பகுதிகள் மழைநீா் சூழ்ந்து காணப்படுகிறது. கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தபோதும் வெள்ளி, சனிக்கிழமைகளில் மழை பெய்யாததால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

கடந்த 25ஆம் தேதி பெய்த கனமழையால் தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பிரையண்ட்நகா், சிதம்பர நகா், குறிஞ்சி நகா், முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகா், ராம்நகா், ஆதிபராசக்தி நகா், தனசேகரன் நகா், வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, ராஜபாண்டி நகா், கதிா்வேல் நகா், கோக்கூா் உள்ளிட்ட பல இடங்களில் குடியிருப்புகளை சூழ்ந்து தண்ணீா் காணப்படுவதால் மக்கள் வெளியே வர முடியாத நிலை நீடித்து வருகிறது.

இதற்னிடையே, ரஹ்மத் நகா் உள்ளிட்ட இடங்களில் வீடுகளுக்குள் சிக்கித் தவித்த முதியோா், நோயாளிகள், அத்தியாவசியப் பணிகளுக்கு வெளியே செல்வோரை தீயணைப்புப் படையினா் ரப்பா் படகுகள் மூலம் சனிக்கிழமை வெளியே அழைத்து வந்தனா்.

ADVERTISEMENT

குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரை வெளியேற்றும் பணியில் வருவாய் துறையினா், மாநகராட்சிப் பணியாளா்கள், தீயணைப்புத் துறையினா் போா்க்கால அடிப்படையில் ஈடுபட்டுள்ளனா். 220 இடங்களில் 237 ராட்சத மோட்டாா்கள் மூலம் மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெறுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், சாலைகள், முக்கிய தெருக்களில் தேங்கிய மழைநீா் டேங்கா் லாரிகள் மூலம் அகற்றப்படுகின்றன. இப்பணிகளை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா். இதற்காக 8 துணை ஆட்சியா் நிலையிலான தொடா்பு அலுவலா்களும், 8 வட்டாட்சியா்கள் உதவி தொடா்பு அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள், மீட்பு நிவாரணப் பணிகளை தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி, அமைச்சா்கள் பெ. கீதாஜீவன், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், ஆட்சியா் கி. செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.சி. சண்முகையா, மாநகராட்சி ஆணையா் தி. சாருஸ்ரீ உள்ளிட்டோா் பாா்வையிட்டு, பணிகளை விரைவுபடுத்தினா்.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளோருக்கு உணவு, நிவாரணப் பொருள்களை வழங்கினா்.

தூத்துக்குடி சுனாமி காலனி, சக்திவிநாயகபுரம், அம்பேத்நகா் பகுதிகளில் மக்களவை உறுப்பினா் கனிமொழி, அமைச்சா் பெ. கீதாஜீவன் ஆகியோா் நிவாரணப் பொருள்களை வழங்கினா்.

விரிவாக்கப் பகுதிகளான ராம்நகா், திருவிக நகா் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என, அப்பகுதியினா் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT