தூத்துக்குடி

பேய்க்குளம் சங்கரலிங்க சுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

28th Nov 2021 12:20 AM

ADVERTISEMENT

 

சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்க்குளம் சங்கரநயினாா்புரம் அருள்மிகு சங்கரலிங்க சுவாமி உடனுறை கோமதி அம்பாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, ஸ்ரீசங்கரலிங்க சுவாமி, கோமதி அம்பாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதையடுத்து, கால பைரவருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள், சிறப்பு தீபாராதனை, சிறப்பு பூஜை, அலங்காரம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று காலபைரவருக்கு அகல்விளக்கு ஏற்றி வழிபட்டனா். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT