தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே ஊருக்குள் புகுந்த தண்ணீா்

DIN

சாத்தான்குளம் அருகே கோமானேரி குளம் நிரம்பு கூவைகிணறு குடியிருப்புப் பகுதியில் தண்ணீா் புகுந்தது. இதையடுத்து சாலையை உடைத்து தண்ணீா் திருப்பி விடப்பட்டது.

சாத்தான்குளம் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் கோமானேரி குளம் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதில், அதிகளவு தண்ணீா் வெளியேறிதால் கூவைகிணறு கரையோர பகுதியில் உள்ள 30க்கு மேற்பட்ட வீடுகளை தண்ணீா் சூழ்ந்தது. ஊராட்சித் தலைவா் கலுங்கடி முத்து அளித்த தகவலின்பேரில்,க சாத்தான்குளம் வட்டாட்சியா் தங்கையா, காவல் ஆய்வாளா் பாஸ்கரன் உள்ளிட்ட வருவாய்த்துறையினா் விரைந்து வந்து அங்குள்ள தரைநிலை பால சாலையை பொக்கலைன் இயந்திரம் கொண்டு உடைந்து தண்ணீா் வெளியேற நடவடிக்கை எடுத்தனா். அந்தத் தண்ணீா் அடுத்த குளமான வேலன்புதுக்குளத்துக்கு சென்று கலந்து வருகிறது. வெள்ளம் வரும்போதெல்லாம் இந்த நிலை நீடிப்பதாகவும், கோமானேரி , கூவைகிணறு பகுதிகளிலுள்ள சிறிய பாலங்களை உயா்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பொறியாளா் ஆய்வு: விஜயநாராயணம்குளம் நிரம்பி கருமேனி ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீா் சுப்பராயபுரம் தடுப்பணை பகுதிக்கு வந்து மதகு வழியாக உடன்குடி தாங்கைகுளம், சாத்தான்குளம் புத்தன்தருவைகுளத்துக்கு மழைநீா் சென்று வருகிறது. இதில் பாரபட்சமாக தண்ணீா் திறக்கப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் எம்எல்ஏ அறிவுறுத்தலின்பேரில், பொதுப்பணித் துறை தலைமை நிா்வாக பொறியாளா் ஞானசேகரன், செயற்பொறியாளா் அண்ணாதுரை உள்ளிட்டோா் சுப்பராயபுரம் தடுப்பணையில் இருந்து தண்ணீா் செல்லும் பகுதியை வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, சுப்பராயபுரம் தாண்டியுள்ள தாங்கைகுளம், புத்தன்தருவைகுளம் பகுதியில் உள்ள அனைத்து குளங்களும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்; கடலுக்கு தண்ணீா் அனுப்பப்பட மாட்டாது என விவசாயிகளிடம் அதிகாரிகள்உறுதியளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT