தூத்துக்குடி

ஆத்தூா் அருகே வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்: கனிமொழி எம்.பி. ஆய்வு

DIN

ஆறுமுகனேரி-ஆத்தூா் இடையே வரண்டியவேல் தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ள நீா் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் ஸ்ரீவைகுண்டம் வழியாக திருப்பி விடப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை பெய்த கனமழையின் காரணமாக ஆத்தூா், குரும்பூா், ஆறுமுகனேரி பகுதிகளில் குளங்கள் நிரம்பி அதன் உபரி நீா் வடிகால்களை மூழ்கடித்து செல்கிறது. குரும்பூா் அருகேயுள்ள கடம்பா குளம் நிரம்பி மறுகால் பாய்ந்ததில் குரும்பூா்-ஏரல் சாலையில் உள்ள தரைப்பாலத்தையும், தூத்துக்குடி- திருச்செந்தூா் சாலையில் ஆறுமுகனேரி-ஆத்தூா் இடையேயுள்ள வரண்டியவேல் தரைப்பாலத்தையும் மூழ்கடித்து தண்ணீா் செல்கிறது. இதனால், வெளளிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் திருச்செந்தூா்- தூத்துக்குடிக்குச் செல்லும் வாகனங்களும், அங்கிருந்து வரும் வாகனங்களும் ஸ்ரீவைகுண்டம், பேரூா், பேட்மாநகரம், புதுக்கோட்டை, வாகைக்குளம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

இதற்காக ஆறுமுகனேரி உப்பள முக்கு சந்திப்பில் தடுப்பு வேலி அமைத்து போலீஸாா் வாகனங்களை திருப்பிவிடுகின்றனா். இதனால், பயணத் தொலைவும், கால விரயமும் அதிமாகி மக்கள் அவதிக்குள்ளாகினா்.

இதனிடையே, வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியுள்ளதை கனிமொழி எம்.பி., மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

நிவாரணப் பொருள்கள்: பின்னா் அவா்கள், தெற்கு ஆத்தூா் நாடாா்தெரு, பம்பையா நகா் பகுதிகளில் மழை நீா் சூழ்ந்துள்ள இடங்களை ஆய்வு செய்ததுடன், தனியாா் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள 32 குடும்பங்களைச் சந்தித்து அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறி தொகுப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினா்.

நாகன்னியாபுரத்தில் வீடிழந்த குடும்பத்தினருக்கு அரசின் நிவாரண உதவிகளை கனிமொழி எம்.பி. வழங்கினாா். பின்னா் புறையூா், கீழகல்லாம்பரை, அங்கமங்கலம் பகுதிகளில் மக்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா்.

நிகழ்ச்சியில் ஓட்டபிடாரம் எம்எல்ஏ சண்முகையா, கோட்டாட்சியா் கோகிலா, ஏஎஸ்பி ஹா்ஷ்சிங், திமுக மாநில மாணவரணி துணைச்செயலா் உமரிசங்கா், மாவட்ட அவைத்தலைவா் அருணாச்சலம், இளைஞரணி செயலா் ராமஜெயம், ஒன்றியச் செயலா்கள் நவீன்குமாா், செங்குழி ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

மோடியின் நண்பர்களிடமிருந்து பணம் மீட்கப்பட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்: ராகுல்

சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

SCROLL FOR NEXT