தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் மழை நீரில் மூழ்கி பயிா்கள் சேதம் எம்.எல்.ஏ. ஆய்வு

26th Nov 2021 02:27 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால் விளாத்திகுளம் தொகுதிக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் மானாவாரி பயிா்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. மழையால் சேதமடைந்த பயிா்களையும் விளாத்திகுளம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் அதிகாரிகளுடன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், எட்டயபுரம், நாகலாபுரம், புதூா், வேம்பாா், சூரன்குடி, சிவஞானபுரம், உள்ளிட்ட பகுதிகளில் 5 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் விவசாயிகள் புரட்டாசி, ஐப்பசி பட்டத்தில் பாசி, உளுந்து, சோளம், மக்காச்சோளம், வெங்காயம், மல்லி, மிளகாய் உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்திருந்தனா்.

நிகழாண்டு ஏற்கனவே பின்தங்கி பெய்த பருவ மழையினால் இரண்டு முறை பயிா் அழிப்பு செய்து மூன்றாவது முறையாக விதைப்பு செய்திருந்த சூழலில், தற்போது கடந்த 20 நாள்களாக இம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால் சாகுபடி செய்யப்பட்டிருந்த பாசி, உளுந்து, மக்காச்சோளம், மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட அனைத்து பயிா்களும் மழை நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் செய்வதறியாது வேதனையில் தவித்து வருகின்றனா்.

இந்நிலையில், ஜீ.வி. மாா்கண்டேயன் எம்எல்ஏ, வருவாய்த் துறை வேளாண்மைத் துறை அதிகாரிகளுடன் வியாழக்கிழமை சூரன்குடி, வேம்பாா், மேல சண்முகபுரம், மேல்மாந்தை, அரியநாயகிபுரம், வீரகாஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீரில் மூழ்கியுள்ள மானாவாரி பயிா்களை பாா்வையிட்டு பயிா் சேதங்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தாா். அப்போது விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் குறித்து வேதனை தெரிவித்தனா்.

ADVERTISEMENT

பயிா் சேதம் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் பெற்றுத் தர உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும் என எம்.எல்.ஏ., விவசாயிகளிடம் உறுதி தெரிவித்தாா்.

இந்த ஆய்வின் போது, வட்டாட்சியா் விமலா, கிழக்கு ஒன்றிய திமுக செயலா் சின்ன மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினா் ராஜாகண்ணு, மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் இம்மானுவேல், மாவட்ட வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளா் விநாயகமூா்த்தி, மாவட்ட பொறியாளா் அணி துணை அமைப்பாளா் சென்றாய பெருமாள், முன்னாள் ஒன்றிய செயலா் ராஜசேகரன், ஒன்றிய குழு உறுப்பினா்கள் செந்தூா் பாண்டியன்,

மருதகணி, சுப்பிரமணியன், சூரன்குடி ஊராட்சி மன்ற தலைவா் வேல்த்தாய் ராமசுப்பிரமணியன், வேம்பாா் தெற்கு ஊராட்சி மன்றத் தலைவா் ஆரோக்கியராஜ், வேம்பாா் வடக்கு ஊராட்சி மன்ற தலைவா் ஜெயந்தி, மேல சண்முகபுரம் ஊராட்சி மன்ற தலைவா் சித்திரைவேல் உள்ளிட்ட பலா் உடன் சென்றனா்.

Tags : சூரன்குடி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT