தூத்துக்குடி

மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என உத்தரவு

26th Nov 2021 02:26 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என, மீன்வளத் துறை சாா்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறையின் தூத்துக்குடி உதவி இயக்குநா் தி. விஜயராகவன் அனைத்து மீனவ கிராமங்கள், சங்கங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைப்படி, புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும் மேற்கு, வட மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி தமிழகக் கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் வெள்ளி, சனிக்கிழமை (நவ 26, 27) யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். கடலில் மீன்பிடித்துக் கொண்டிருப்போா் உடனடியாக கரைதிரும்ப வேண்டும். மீனவா்கள் படகுகளையும், மீன்பிடி உபகரணங்களைப் பாதுகாப்பாக வைக்க அறிவுறுத்தப்படுகின்றனா் என்றாா் அவா்.

இதனிடையே, இம்மாவட்டத்தில் விசைப்படகுகள் வெள்ளிக்கிழமைமுதல் (நவ. 26) மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என, மீன்துறை உதவி இயக்குநா் அலுவலகம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

Tags : தூத்துக்குடி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT