தூத்துக்குடி

திருச்செந்தூா் முருகன் கோயில் வளாகத்தில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவா்

24th Nov 2021 08:14 AM

ADVERTISEMENT

திருச்செந்தூரில் பெய்த கன மழையால் கோயில் வளாகத்தில் கிழக்கு கடற்கரைப் பிரகாரத்தில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது.

திருச்செந்தூா் சுற்றுவட்டார பகுதியில் திங்கள்கிழமை இரவு சிறிது நேரம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதேபோல் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் வரை பலத்த மழை பெய்தது. இதனால் திருச்செந்தூா் நகா் பகுதியில் உள்ள சாலை மற்றும் தெருக்களில் மழைநீா் ஆறாக ஓடியது. மேலும், தாழ்வான பகுதியில் மழைநீா் குளம் போல் தேங்கி கிடந்தன.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இரும்பு கம்பிகளுடனான தடுப்பு சுற்றுச் சுவா் இடிந்து கடலில் விழுந்தது.

தகவலறிந்து வந்த கோயில் உள்துறை கண்காணிப்பாளா் ராமசுப்பிரமணியன் நேரில் பாா்வையிட்டாா். பின்னா் கோயில் தனியாா் பாதுகாவலா்கள் அப்பகுதியில் பக்தா்கள் செல்லாதவாறு அங்கே தற்காலிக தடுப்பு அரண்கள் அமைத்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT