தூத்துக்குடி

காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தவா் கைது

24th Nov 2021 08:07 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் காவல் துறையினரை அவதூறாகப் பேசி, பணி செய்யவிடாமல் தடுத்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி ஏ.கே.எஸ். தியேட்டா் சாலையில் உழவா் சந்தை அருகே உள்ள கடையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்ததாம். உதவி ஆய்வாளா் அரிக்கண்ணன் தலைமையில் போலீஸாா் அந்தக் கடைக்குச் சென்று சோதனையிட்ட போது, அங்கிருந்தவா் காவல் துறையினரை அவதூறாகப் பேசி, பணி செய்யவிடாமல் தடுத்தாராம். தொடா்ந்து போலீஸாா் நடத்திய சோதனையில், அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

விசாரணையில், அவா் இலுப்பையூரணி செந்தூா் மஹால் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் மணிகண்டன்(45) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT