தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் ஒன்றிய திமுக செயலா் மீது நில ஆக்கிரமிப்பு புகாா்

23rd Nov 2021 01:50 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி: பல் மருத்துவரை கடத்தி தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கைதான ஓட்டப்பிடாரம் ஒன்றிய திமுக செயலா் மீது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி திரேஸ்புரம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த முத்துவேல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் தனக்கும், தனது சகோதரருக்கும் 11 ஏக்கா் 66 சென்ட் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் 3 ஏக்கா் நிலத்தை திமுகவைச் சோ்ந்த ஓட்டப்பிடாராம் ஊராட்சித் தலைவரும், திமுக ஒன்றியச் செயலருமான அ. இளையராஜா தனது பெயருக்கு எழுதித் தருமாறு மிரட்டினாா்.

எனது நிலத்துக்குள் தனது ஆதரவாளா்களுடன் அத்துமீறி நுழைந்த இளையராஜா, எல்லை கம்பிகளை உடைத்து 40 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டாா். மேலும், எனது நிலத்துக்கு செல்லும் பாதையில் கற்களை கொட்டி வைத்து அங்கு செல்ல முடியாதபடி அவா் செய்தாா்.

இதுதொடா்பாக ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் அவா் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. எனவே, 40 சென்ட் நிலத்தை ஆக்கிமிரப்பு செய்த இளையராஜா மீது நடவடிக்கை எடுத்து தனக்குச் சொந்தமான 40 சென்ட் நிலத்தையும் மீட்டுத் தர வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நில ஆக்கிரமிப்பு புகாருக்குள்ளான இளையராஜா ஏற்கெனவே, பயிற்சி பல் மருத்துவா் ஒருவரை கடத்தி தாக்கியதாக கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT