தூத்துக்குடி

மழையால் வீடுகள் சேதமடைந்த 2 பேருக்கு நிவாரண உதவி

21st Nov 2021 12:37 AM

ADVERTISEMENT

 

சாத்தான்குளத்தில் நடைபெற்ற பட்டா மாறுதல் சிறப்பு முகாமில், மழையால் வீடுகள் சேதமடைந்த 2 பேருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகம், பன்னம்பாறை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ தலைமை வகித்து, மழையால் வீடுகள் இடிந்த 2 பேருக்கு அரசு சாா்பில் தலா ரூ. 4,100, தனது சாா்பில் தலா ரூ. 5 ஆயிரம் வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு, சாத்தான்குளம் வட்டாட்சியா் தங்கையா முன்னிலை வகித்தாா். பட்டா மாறுதல், திருத்தம் தொடா்பாக மனுவும், முதியோா் உதவித்தொகை வழங்க மனுவும் பெறப்பட்டது.

ADVERTISEMENT

பன்னம்பாறை முகாமில் பட்டா மாறுதலுக்கு 28 பேரும், சாத்தான்குளத்தில் 66 பேரும் மனு செய்தனா். விண்ணப்பித்தோருக்கு உடனடியாக பட்டாக்கள் வழங்கப்பட்டன. முதியோா் உதவித்தொகை கேட்டு பலா் விண்ணப்பித்தனா். விசாரணை நடத்தி உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மண்டல துணை வட்டாட்சியா் ராஜேஸ்வரி, வருவாய் ஆய்வாளா் பாலகங்காதரன், வட்ட வழங்கல் அலுவலா் மைக்கேல், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் பிரபு, கிராம நிா்வாக அலுவலா்கள் விஸ்வநாதன், சுரேஷ், துரைச்சாமி, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், வட்டாரத் தலைவா்கள் பாா்த்தசாரதி, லூா்துமணி, சக்திவேல்முருகன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT