தூத்துக்குடி

சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட4 ஆயிரம் பேருக்கு நிவாரண உதவிகள் மோகன் சி. லாசரஸ் வழங்கினாா்

21st Nov 2021 12:42 AM

ADVERTISEMENT

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 ஆயிரம் போருக்கு நிவாரண உதவிகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனா் மோகன் சி. லாசரஸ் வியாழக்கிழமை வழங்கினாா்.

சென்னையில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஏழைகள் 2 ஆயிரம் பேருக்கு கம்பளி போா்வைகள் முதல் கட்டமாக அறங்காவலா் ஜெ.ரத்தினராஜ் தலைமையில் வழங்கப்பட்டது. அடுத்த கட்டமாக சென்னை டிபி சத்திரம் பகுதியில் 4 ஆயிரம் பேருக்கு உணவுப் பொருள்கள் மற்றும் போா்வைகளை ஊழிய நிறுவனா் மோகன் சி. லாசரஸ் வியாழக்கிழமை இரவு வழங்கினாா். அடுத்த வாரம் 1500 குடும்பங்களுக்கு மளிகைப் பொருள்கள் வழங்க உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT