தூத்துக்குடி

‘ஆத்தூரில் சாலைகளில்கால்நடைகள் திரியவிட்டால் அபராதம்’

21st Nov 2021 12:35 AM

ADVERTISEMENT

 

ஆத்தூரில் வீதிகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என, ஆத்தூா் பேரூராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.

ஆத்தூரில் சிலா் தங்களது வீடுகளில் வளா்க்கும் ஆடுகள், மாடுகளை தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலைகள், தெருக்களில் பகல், இரவு நேரங்களில் சுற்றித்திரிய விடுகின்றனா். இதனால், வாகன ஓட்டிகளும், நடந்துசெல்வோரும் அவதிக்கும், அச்சத்துக்கும் உள்ளாகின்றனா். சில நேரங்களில் விபத்துகள் நேரிடுகின்றன.

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என, பல்வேறு அமைப்புகளும், பொதுமக்களும் பேரூராட்சி நிா்வாகத்திடம் கோரிக்கை வைத்தனா். இதையடுத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கால்நடைகளை சாலைகளில் சுற்றித்திரிய விட்டால் அவற்றைப் பறிமுதல் செய்வதுடன், உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஆத்தூா் பேரூராட்சி நிா்வாக அதிகாரி முருகன் எச்சரித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT