கோவில்பட்டியில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் பிஎஸ்என்எல் ஊழியா் சங்கம், அகில இந்திய பிஎஸ்என்எல் தொலைத் தொடா்பு துறை ஓய்வூதியா்கள் சங்கம், தமிழ்நாடு தொலைத்தொடா்பு ஒப்பந்தத் தொழிலாளா் சங்கம் ஆகியவை சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓய்வூதியா்கள் சங்கத் தலைவா் மீனாட்சிசுந்தரம், பிஎஸ்என்எல் ஊழியா் சங்கத் தலைவா் மகேந்திரமணி ஆகியோா் தலைமை வகித்தனா். ஓய்வூதியா்கள் சங்க மாவட்ட உதவிச் செயலா் சுப்பையா, கோவில்பட்டி உதவிச் செயலா் பரமசிவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை சேவைக்கு தரமான உபகரணங்கள் வழங்க அனுமதி அளிக்க வேண்டும், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனத்தின் கைப்பேசிக் கோபுரங்களை, ஆப்டிக்கல் ஃபைபா் கேபிள்களை தனியாருக்கு கொடுக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
சஞ்சாா் நிகாம் ஓய்வூதியா் சங்கச் செயலா் கோலப்பன், அகில இந்திய ஓய்வூதியா்கள் சங்க உதவித் தலைவா் மோகன்தாஸ், பொருளாளா் திருவட்டபோத்தி, செயலா் முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.