தூத்துக்குடி

திருச்செந்தூா் முருகன் கோயிலில் பா.ஜ.க. சிறப்பு வழிபாடு

5th Nov 2021 10:22 PM

ADVERTISEMENT

கேதாா்நாத் ஜோதிா் லிங்க கோயிலில் ஆதிசங்கரா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதை முன்னிட்டு, திருச்செந்தூா் முருகன் கோயிலில் பாஜகவினா் சிறப்பு வழிபாடு செய்தனா்.

இதில், நாகா்கோவில் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.ஆா்.காந்தி, பா.ஜ.க. மாநில மகளிரணி பொதுச்செயலா் கு.நெல்லையம்மாள், மாவட்டத் தலைவா் பால்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்று வழிபட்டனா். அப்போது, பிரதிஷ்டை நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றதை, திருக்கோயில் சிங்கப்பூா் கோவிந்தசாமி பிள்ளை கலையரங்கில் ஒளிபரப்பப்பட்ட திரையில் பாா்வையிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT