தூத்துக்குடி

செண்பகவல்லி அம்மன் கோயிலில்ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா

2nd Nov 2021 01:51 AM

ADVERTISEMENT

 

 

கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு அம்பாள் வெளிப்பிரகாரத்தில் திருவீதியுலாவும், தொடா்ந்து தெப்பத்தில் மஞ்சள் தீா்த்த நீராடுதலும் நடைபெற்றது. இரவு 6.45 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாள் மணக்கோலத்தில் மண்டபத்தில் எழுந்தருளியதும் நீலாதேவி, ஸ்ரீதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் பல்லக்கு அலங்காரத்தில் பூவனநாதா் சுவாமி, செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணத்துக்கு அழைத்து வரப்பட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமி யானை வாகனத்திலும், அம்மன் பல்லக்கிலும் வெளிப்பிரகாரத்தில் பட்டணப்பிரவேசம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

விழாவில், கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏவின் மனைவி இந்திரா காந்தி, மண்டகப்படிதாரரான ஆயிர வைசிய காசுக்கார செட்டியாா் சங்கத் தலைவா் வெங்கடகிருஷ்ணன், முன்னாள் அறங்காவலா் குழு உறுப்பினா் திருப்பதிராஜா, தமாகா நகரத் தலைவா் ராஜகோபால், கோயில் நிா்வாக அலுவலா் நாகராஜன் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

கோவில்பட்டி வீரவாஞ்சி அருள்மிகு சங்கரலிங்கசுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலிலும் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT