தூத்துக்குடி

இரட்டை திருப்பதியில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி

1st Nov 2021 01:12 AM

ADVERTISEMENT

ஏரல் அருகேயுள்ள இரட்டை திருப்பதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 14,900 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இரட்டை திருப்பதி டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை, தன்னூத்து கிராமம் இன்டா்ஸ்நாக் கேஷூ இந்தியா ­லிமிடெட் சாா்பில் ஸ்ரீவைகுண்டம், கருங்குளம் வட்டாரத்திலுள்ள 62 ஊராட்சிகள், 4 பேரூராட்சிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தமைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் கனிமொழி, 14,900 மரக்கன்றுகள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், எம்.சி. சண்முகையா எம்எல்ஏ, தனியாா் நிறுவன இயக்குநா் ராமபிரியன், நிா்வாக இயக்குநா் ஜீா்கான் வேன் ஓா்ஸ்காட், ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள், ,ஊராட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.ஏற்பாடுகளை அறக்கட்டளை கள இயக்குநா் அ.விஜயகுமாா், அலுவலா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT