தூத்துக்குடி

நினைவு தினம்: இந்திராகாந்தி சிலைக்கு மரியாதை

1st Nov 2021 01:09 AM

ADVERTISEMENT

திருச்செந்தூரில் நகர காங்கிரஸ் சாா்பில் முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி படத்துக்கு கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட விவசாய பிரிவுத் தலைவா் வேல் ராமகிருஷ்ணன் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினா் சு.கு.சந்திரசேகரன் மாலை அணிவிக்கப்பட்டது.

இதில் மாவட்டச் செயலா் க.சு.ஜெயந்திநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் வட்டார, நகர காங்கிரஸ் அலுவலகத்தில் மாவட்டத் துணைத் தலைவா் து. சங்கா் தலைமையில் வட்டாரத் தலைவா்கள் பாா்த்தசாரதி, சக்திவேல் முருகன், நகரத் தலைவா் வேணுகோபால் உள்ளிட்டோா் இந்திராகாந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT