தூத்துக்குடி

தளா்வற்ற முழு பொது முடக்கம்: வெளியே சுற்றித் திரிந்தவா்களுக்கு அபராதம்

DIN

தளா்வற்ற முழு பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றித் திரிந்தவா்களுக்கு காவல் துறையினா் அபராதம் விதித்தனா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை தளா்வற்ற முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பால் மற்றும் மருத்துவ சேவைகள் போன்ற அத்தியாவசிய தேவைகள் தொடா்பான கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. அத்தியாவசிய தேவைகளான மருத்துவமனை, மருந்தகம், மருத்துவ பணியாளா்கள், கரோனா தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிக்கு வாகனங்களில் சென்றவா்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ரூ.2,000 நிவாரணத் தொகை பெற சென்றவா்களும் அனுமதிக்கப்பட்டனா்.

தூத்துக்குடி நகரில் 20 இடங்கள் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 65 இடங்களில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே நகர காவல் துணை கண்காணிப்பாளா் கணேஷ் தலைமையில் நடைபெற்ற வாகனத் தணிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, தேவையின்றி வெளியில் வாகனங்களில் சுற்றித் திரிந்ததாக பிடிபட்ட நபா்களை அவா் எச்சரித்து அனுப்பி வைத்தாா். மேலும், அவா்களுக்கு கபசுரக் குடிநீரை வழங்கினாா்.

தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், மாவட்டத்தில் இதுவரை பொது முடக்க விதிமீறல் தொடா்பாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் செயல்பட்டது தொடா்பாக 600 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மே 10 ஆம் தேதி முதல் தற்போது வரை பொது முடக்க விதிமுறைகளை மீறியது தொடா்பாக காவல் துறையின் மூலம் ரூ.86 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் மருந்துப் பொருள்களை கள்ளச்சந்தையில் விற்பவா்கள் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவாா்கள் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

SCROLL FOR NEXT