தூத்துக்குடி

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்திய 235 கிலோ கஞ்சா பறிமுதல்

DIN

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்திய 235 கிலோ கஞ்சா பறிமுதல் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் விரலி மஞ்சள், பீடி இலை, ஏலக்காய், மஞ்சத்தூள், உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது‌. இதைத்தொடர்ந்து இந்திய கடலோர காவல் படையினர் மரைன் போலீசார், சுங்க துறை, மத்திய வருவாய் புலனாய்வு துறை போலீசார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தாலும் இவர்கள் கண்ணில் மண்ணைத் தூவியபடி கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி அருகே உள்ள கீழவைப்பாற்றில் இருந்து ஒரு நாட்டுப் படகில் 7 பேர் கஞ்சா கடத்தி சென்றுள்ளனர். இவர்களை இலங்கை கடற்படையினர் மடக்கி பிடித்து  படகில் சோதனை செய்ததில் 235 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர் கஞ்சாவை பறிமுதல் செய்த கடற்படையினர் 7 பேரையும் கைது செய்து உள்ளனர். இதுகுறித்து இலங்கை கடற்படையினர் அந்த நாட்டு அரசுக்கு தெரிவித்து உள்ளனர். 

கரோனா அச்சத்தால் கஞ்சாவை மட்டும் பறிமுதல் செய்து அவர்களை விடுதலை செய்யுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டதைத்தொடர்ந்து அவர்களை எச்சரித்து அதே படகில் மீண்டும் தூத்துக்குடி செல்லுமாறு சர்வதேச கடல் எல்லையில் வந்த இலங்கை கடற்படையினர் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில்  தூத்துக்குடியிலிருந்து குட்டி யாணை வாகனம் மூலம் 6 பேர் சுமார் ஒன்றரை டன் விரலி மஞ்சளை இலங்கை கடத்துவதற்காக கடற்கரைக்கு கொண்டு வந்துள்ளனர். 

இந்த நிலையில் கடலோர காவல் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர்களை சுற்றி வளைத்து மஞ்சளை பறிமுதல் செய்தனர். வாகனத்தில் இருந்த 6 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

சித்திரமே... சித்திரமே...

SCROLL FOR NEXT