தூத்துக்குடி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் சசிகலா தரிசனம்

29th Mar 2021 11:29 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார். 

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்த ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா கடந்த ஜனவரி 27ஆம் தேதியன்று விடுதலை செய்யப்பட்டார்.

அந்தத் தருணத்தில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால், சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு, பிப்ரவரி 8ஆம் தேதியன்று சென்னை திரும்பினார். பின்னர் மார்ச் 3 ஆம் தேதி அரசியலிலிருந்து ஒதுங்கி இருப்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

ADVERTISEMENT

பின்னர் சிறிது காலம் மௌனமாக இருந்தார் தற்போது தமிழகத்தில் பல்வேறு கோவிலுக்கு சென்று வரும் நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

Tags : Sasikala
ADVERTISEMENT
ADVERTISEMENT