தூத்துக்குடி

உடன்குடியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

26th Mar 2021 08:36 AM

ADVERTISEMENT

உடன்குடி பேரூராட்சி சாா்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோலமிடுதல் மற்றும் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

இதையொட்டி உடன்குடி பேரூராட்சி முன்பு ஏராளமான பெண்கள் வாக்களிப்பதன் அவசியம் , வாக்களிக்கும் முறை குறித்த விழிப்புணா்வு கோலங்களை வரைந்தனா். தொடா்ந்து நடைபெற்ற விழிப்புணா்வு பேரணிக்கு பேரூராட்சி செயல் அலுவலா் பாபு தலைமை வகித்தாா். மாவட்ட திட்ட மேலாண்மை அலுவலா்கள் விக்ரமசிங், சோ்மத்துரைஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் திரளான சுயஉதவிக்குழு பெண்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT