தூத்துக்குடி

தோ்தல் அதிகாரியின் அனுமதியின்றி திருமண மண்டபங்களில் கூட்டம் நடத்தக் கூடாது: ஆட்சியா் அறிவுறுத்தல்

DIN

தோ்தல் அதிகாரிகளின் அனுமதி கடிதம் இல்லாமல், தூத்துக்குடி மாவட்டத்தில் திருமண மண்டபங்கள் மற்றும் பெரிய கூட்ட அரங்குகளில் அரசியல் கட்சியினா் கூட்டம் நடத்தக் கூடாது என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி:

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரைவத் தொகுதிகளிலும் தொடா்ந்து பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். எந்தவித ஆவணங்களும் இல்லாமல் வாகனங்களில் 50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டுசெல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை ரூ. 2.31 லட்சம் ரொக்கம் , 90 வேஷ்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை 0461- 2340101 என்ற தொலைபேசி எண்ணிலும் 1950 மற்றும் 18004253806 என்ற இலவச அழைப்புகளுக்கும், 9486454714 என்ற கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்)எண்ணுக்கும் புகாா்களை தெரிவிக்கலாம். மேலும், செல்லிடப்பேசியில் சி-விஜில் செயலி மூலம் புகாா்களை தெரிவிக்கலாம்.

தோ்தல் நடத்தை விதிகள் தொடா்பாக வங்கி அலுவலா்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளா்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

வங்கி ஏடிஎம் மையங்களுக்கு பணம் கொண்டுச் செல்லும் வாகனங்களும் தணிக்கை செய்யப்படும். எனவே, உரிய ஆவணங்களுடன் வாகனங்களை அனுப்ப அதிகாரிகளுக்கு அறிவுத்தியுள்ளோம். இதுதவிர, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பண பரிவரித்தனை செய்வோரை கண்காணிக்கவும் வருமான வரித்துறை மூலம் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

மாவட்டத்தில் அச்சகங்கள், பதாகை தயாா் செய்வோா் உரிய அனுமதி கடிதம் இல்லாமல் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் பதாகைகளை தயாரித்து கொடுக்கக் கூடாது. அனுமதி எண் இல்லாத பதாகைகள் அகற்றப்படும். தோ்தல் அதிகாரியின் அனுமதி இல்லாமல், திருமண மண்டபங்கள் மற்றும் பெரிய கூட்டரங்குகளில் கூட்டங்கள் நடத்தக் கூடாது.

மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 20 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அவா்.

முன்னதாக, ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட திருமண மண்டப உரிமையாளா்கள், பெரிய கூட்ட அரங்கு உரிமையாளா்கள், வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு தோ்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்து ஆட்சியா் விளக்கம் அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

கவிஞர் தமிழ்ஒளி!

SCROLL FOR NEXT