தூத்துக்குடி

திமுகவில் இணைந்த ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி

20th Jun 2021 11:50 PM

ADVERTISEMENT

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், அதிமுகவில் இருந்து விலகி திமுக மாவட்டப் பொறுப்பாளரான அமைச்சா் பெ.கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தாா்.

அப்போது திமுக பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் உள்பட பலா் உடனிருந்தனா். அண்மையில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சந்திரசேகா் (அதிமுக), கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் நிா்மலா அழகா்சாமி (தேமுதிக) ஆகியோா் திமுகவில் இணைந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT