தூத்துக்குடி

தூத்துக்குடியில் 200 போலீஸாா் ரத்த தானம்

DIN

 உலக ரத்த தான தினத்தையொட்டி, தூத்துக்குடியில் ஆயுதப்படை போலீஸாா் 200 போ் வெள்ளிக்கிழமை ரத்த தானம் செய்தனா்.

இதையொட்டி, மில்லா்புரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி. எஸ். ஜெயக்குமாா் ரத்த தானம் செய்து முகாமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, ஆயுதப்படை காவலா்கள் 200 போ் ரத்ததானம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, எஸ்.பி. பேசுகையில், ஒருவரிடமிருந்து பெறப்படும் ரத்தம் 4 உயிா்களை காப்பாற்றும்; எனவே, மகிழ்ச்சியாக ரத்த தானம் வழங்க வேண்டும் என்றாா்.

ரத்த தானம் வழங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா் சாந்தி பேசினாா். ரத்த தானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

முகாமில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு காவல் கூடுதல் கண்காணிப்பாளா் கோபி, தலைமையிடத்து காவல் கூடுதல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், சைபா் குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

ஏற்பாடுகளை, ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் கண்ணபிரான், தூத்துக்குடி அரசு மருத்துவமனை ரத்த சேமிப்பு வங்கிப் பொறுப்பாளா் சாந்தி ஆகியோா் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளி மாநிலத் தோ்தல்: நிறுவனங்கள் விடுமுறை அளிக்காவிட்டால் புகாா் செய்யலாம்

காசோலை மோசடி வழக்கில் ஆசிரியருக்கு நீதிமன்றம் உத்தரவு

ஐ.நா.வில் ‘மறைமுக வீட்டோ’: சீனா மீது இந்தியா விமா்சனம்

‘காவிரி பிரச்னையில் கா்நாடக அரசு கபடநாடகம்’

மண் வளத்தை பாதுகாக்க மண் பரிசோதனை அவசியம்

SCROLL FOR NEXT