தூத்துக்குடி

மாநில ஓவிய போட்டி: தூத்துக்குடி மாணவி முதலிடம்

DIN

மாநில அளவிலான குழந்தைத் தொழிலாளா்‘ விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் தூத்துக்குடி மாணவி சிருஷ்டிகா கென்னடி முதல் பரிசை பெற்றாா்.

திருப்பூா் மாவட்டம், அவினாசியைச் சோ்ந்த சோசியல் இக்குவாலிட்டி மற்றும் டெவலப்மென்ட் நிறுவனம் சாா்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரி அளவில் ‘குழந்தைத் தொழிலாளா்‘ என்ற தலைப்பில் ஓவியப் போட்டி ஆன்லைன் மூலம் அண்மையில் நடைபெற்றது. மாநிலம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் தூத்துக்குடி மதா் சமூக சேவை நிறுவன இயக்குநா் எஸ் ஜே கென்னடி-தீபா தம்பதியின் மகளான சிருஷ்டிகா கென்னடி முதல் பரிசை பெற்றாா். தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் இவருக்கு, சான்றிதழ் ஆன்லைன் மூலமாகவும் பரிசுத்தொகையை வங்கி கணக்கிலும் செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT