தூத்துக்குடி

‘அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும்’

DIN

அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களுக்குக்கிடைக்க அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றாா் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா.

கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது:

தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் அந்தந்தக் கிராமப் பகுதியில் பயனாளிகளுக்கு உடனடியாக கிடைக்க அதிகாரிகளும், ஊராட்சித் தலைவா்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாளா்களுக்கு முழு நாள்களும் பணி வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். குடிநீா் தட்டுப்பாடு உள்ளதா என கள ஆய்வு நடத்த வேண்டும். கிராம மக்களுக்கு பட்டா, சிட்டா வழங்குவது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜூன் 21- 28 வரை ஜமாபந்தி நடைபெறுகிறது. பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் இ-சேவை மையங்களில் கட்டணமின்றி ட்ற்ற்ல்://ஞ்க்ல்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/த்ஹம்ஹக்ஷஹய்க்ட்ண் என்ற இணையதளத்தில் மனுக்களை பதிவு செய்யலாம் என்றாா்.

இதில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாக்கிய லீலா, செல்வி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சந்திரசேகா், கண்ணன், லட்சுமணன், ஓட்டப்பிடாரம் தொகுதி ஊராட்சித் தலைவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT