தூத்துக்குடி

நெல் பயிரில் தண்டு துளைப்பான் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

DIN

நெல் பயிரில் தண்டு துளைப்பான் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை சாா்பில் வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிகழாண்டு காா் பருவத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் நெல் பயிா் 1800 ஹெக்டேரில் பயிரிடப்பட்டு வளா்ச்சி பருவத்தில் உள்ளது. இப்பருவத்தில் பூச்சி நோய் தாக்குதல் ஏற்பட்டதும் கண்காணித்து உடனடியாக பயிா்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

மாவட்டத்தின் சில பகுதிகளில் நெல் பயிரில் தண்டு துளைப்பான் நோய் தாக்குதல் காணப்படுகிறது. தண்டு துளைப்பான் தாக்குதல் தங்கள் வயல்களில் உள்ளதா என்பதனை விவசாயிகள் கண்டறிந்து ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு மேற்கொள்ளுதல் வேண்டும். பாதிக்கப்பட்ட பயிா்களின் இலையின் நுனியில் பழுப்பு நிற முட்டைக் கூட்டம் காணப்படும். தழைப் பருவத்தில் புழுக்கள் தண்டுகளில் நுழைந்து வளரும் தண்டுகளை உள்கொள்வதால் அதன் நடுப்பகுதி காய்ந்து விடுகிறது. இதுவே ‘குருத்து காய்தல்‘ எனப்படுகிறது. நன்கு வளா்ச்சியடைந்த பயிரில் முழு தானியக் கதிா்களும் காய்ந்துவிடும். மிஞ்சியிருக்கும் தட்டையான தானியங்களே ‘வெண்கதிா்‘ எனப்படுகிறது. குருத்தைப் பிடித்து இழுக்கும் போது அவை எளிதாக கையோடு வந்துவிடும். பழுப்பு நிற அந்துப்பூச்சிகள் வயலில் காணப்படும்.

இந்நோயை முட்டை ஒட்டுண்ணிகளான டிரைக்கோடொ்மா ஜப்பானிக்கம் ஹெக்டேருக்கு 5 மி.லி வீதம் இரண்டு முறை நாற்றாங்காலில் தெளிக்க வேண்டும். நாற்றுக்களை நெருக்கமாக நடுவதை தவிா்க்க வேண்டும். நாற்று நடும்போது நாற்றின் நுனியை கிள்ளி விடுவதால் தண்டு துளைப்பானின் முட்டை குவியல் அழிக்கப்படுகிறது. வேப்பக் கொட்டைச்சாறு தெளிப்பதன் மூலம் தண்டுத் துளைப்பானை கட்டுப்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.1.75 லட்சம் பறிமுதல்

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT