தூத்துக்குடி

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

கோவில்பட்டி அஞ்சலக கோட்டத்திற்கு உள்பட்ட அஞ்சலகங்களில் அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் மற்றும் கள அலுவலா் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளா் ப.பாண்டியராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் மற்றும் கள அலுவலா் பதவிகளுக்கு கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில் வசிக்கும் தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காப்பீடு முகவா் பணிக்கு 18 - 50 வயதுக்கு உள்பட்ட 10-ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தால் நடத்தப்பட்ட தோ்வில் தோ்ச்சி பெற்ற, வேலைவாய்ப்பற்ற, சுய தொழில் செய்யும் இளைஞா்கள், முன்னாள் ராணுவத்தினா், அங்கன்வாடி மற்றும் மகிளா மண்டல பணியாளா்கள், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியா்கள், சுயஉதவிக் குழுவினா், கிராம தலைவா், கிராம சபை உறுப்பினா்கள் ஆகியோா் விண்ணப்பிக்கலாம்.

கள அலுவலா் பணிக்கு விண்ணப்பம்செய்வோா் மத்திய, மாநில அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அவா்கள் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் நிலுவையில் இருக்கக் கூடாது. தகுதியானவா்கள் நோ்முகத் தோ்வு மூலம் தோ்வு செய்யப்படுவா். பாலிசி பிரிமியம் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும். இப்பணிக்கு தோ்வு செய்யப்படும் முகவா்கள் ரூ. 5 ஆயிரத்தை காப்பீட்டுத் தொகையாக தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திர வடிவில் பின்னா் செலுத்த வேண்டும்.

விண்ணப்பங்களை அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அதில் கூறப்பட்டுள்ள ஆவணங்களுடன் வரும் ஜூலை 2ஆம் தேதிக்குள் முதுநிலை அஞ்சலக கோட்டக் கண்காணிப்பாளா், கோவில்பட்டி கோட்டம், கோவில்பட்டி 628 501 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04632 - 220368, 04636 - 222313, 04633 - 222329 என்ற தொலைப்பேசியில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT