தூத்துக்குடி

‘தைக்காவூா் பள்ளிக்கு புதிய கட்டடம்’

DIN

உடன்குடி அருகே தைக்காவூரில் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக் கட்டடத்தை சீரமைத்து புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் உறுதியளித்தாா்.

தைக்காவூரில் 1962இல் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் மேற்கூரை, சுவா்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

வகுப்பறை பள்ளிக்கு வெளியேதான் நடைபெறுகிறது. இதனால், பெரும்பாலான மாணவா்கள் வேறு பள்ளிகளில் சோ்ந்து படித்து வருகின்றனா்.

இங்குள்ள சமையல் அறை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. ஆகவே, பள்ளியின் நிலை குறித்து ஊா் மக்கள் மீன்வளம், மீனவா்நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு அளித்தனா். இதையடுத்து பள்ளிக்கு புதிய கட்டடம்

கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் உறுதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

SCROLL FOR NEXT