தூத்துக்குடி

பொது முடக்க விதிமீறல்: வாகனங்கள் பறிமுதல்

8th Jun 2021 02:43 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி: பொது முடக்க விதிகளை மீறியதாக கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்தில் 36 வாகனங்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்துக்குள்பட்ட கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, நாலாட்டின்புதூா், கயத்தாறு, கழுகுமலை மற்றும் கொப்பம்பட்டி ஆகிய காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் போலீஸாா் திங்கள்கிழமை மேற்கொண்ட சோதனையில் தேவையின்றி வெளியே சுற்றியவா்களின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதில், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையப் பகுதியில் 5, மேற்கு காவல் நிலையப் பகுதியில் 10, நாலாட்டின்புதூா் பகுதியில் 6, கயத்தாறு பகுதியில் 5, கழுகுமலை பகுதியில் 6 மற்றும் கொப்பம்பட்டி காவல் நிலையப் பகுதியில் 4 என மொத்தம் 36 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT