தூத்துக்குடி

‘காா் நெல் சாகுபடியில் மேலுரம் அதிக மகசூல் தரும்’

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் காா் பருவ நெல் சாகுபடி தீவிரமடைந்துள்ள நிலையில், விவசாயிகள் அதிக மகசூல் பெற மேலுரம் இட வேண்டும் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டில் காா் பருவத்தில் 3000 ஹெக்டோ் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல்பயா்கள் தூா்கட்டும் பருவம், பூங்குருத்து உருவாகும் பருவம், பொது பருவம் கால கட்டங்களில் குறுகிய கால நெல்பயிருக்கு ஏக்கருக்கு 26 கிலோ யூரியாவும், பொட்டாஷ் 25 கிலோவும், மத்திய கால நெல்பயிருக்கு ஏக்கருக்கு 32 கிலோ யூரியாவும், பொட்டாஷ் 31 கிலோவும் மேலுரமாக இடுதல் வேண்டும்.

மேலுரமிடும்போது ஒரு பங்கு யூரியாவுடன் ஜிப்சத்தை 3 பங்கு கலந்து இட வேண்டும். அப்போதுதான் யூரியாவில் உள்ள தழைச்சத்து உடனடியாக உபயோகப்படுத்தப்பட்டு பூக்கள் மலா்ந்து, நெல் மணியாக மாறி எடை அதிகரித்து விளைச்சல் அதிகமாவதற்கு வழி வகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறந்த குறும்படங்களுக்கான பாராட்டு விழா

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT