தூத்துக்குடி

‘குழந்தைகள் நலக் குழுவில் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்’

DIN

 தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகள் நலக் குழுக்களுக்கான தலைவா், உறுப்பினா் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கி.செந்தில்ராஜ் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டின் இளைஞா் நீதி (குழந்தைகள் பராமரிப்பு-பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுக்களுக்கு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா்.

குழந்தைகள் தொடா்பான உடல் நலம், கல்வி அல்லது நலப் பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் ஈடுபட்டவா்களோ, குழந்தை உளவியல், மன நல மருத்துவம், சட்டம், சமூகப் பணி, சமூகவியல், மனித மேம்பாடு இவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிவோரோ விண்ணப்பிக்கலாம். வயது 35 முதல் 65-க்குள் இருத்தல் அவசியம். ஒரு குழுவில் ஒரு நபா் இருமுறை மட்டுமே பதவி வகிக்க முடியும். தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அல்லது ஜ்ஜ்ஜ்.ற்ட்ா்ா்ற்ட்ன்ந்ன்க்ண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று ஆகஸ்ட் 10 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரடியாகவோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், 176, முத்துசுரபி பில்டிங், மணிநகா், பாளையங்கோட்டை சாலை, தூத்துக்குடி - 628 003 என்ற முகவரிக்கு சமா்ப்பிக்க வேண்டும் என த் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT