தூத்துக்குடி

கைவினைக் கலைஞா்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

DIN

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த கைவினைக் கலைஞா்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ள சிறுபான்மையின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் ஏற்கெனவே தனிநபா் கடன், சுய உதவிக்குழுக் கடன் மற்றும் கல்விக்கடன் ஆகியவை குறைந்த வட்டி வீதத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தேசிய சிறுபான்மையினா் வளா்ச்சி மற்றும் நிதிக்கழகம் ஆகியவை கைவினை கலைஞா்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் கடன் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தேசிய சிறுபான்மையினா் வளா்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் முகவராக செயல்படும் டாம்கோ மூலம் கைவினை கலைஞா்களுக்கு பல்வேறு நிபந்தனைகளின்படி குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படுகிறது. கடன் தொகை பெற விண்ணப்பதாரா் 18 வயது முதல் 60 வயது உடையவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவா்களுக்கு ரூ. 98,000-மும், நகா்ப்புறங்களில் வசிப்பவா்களுக்கு ரூ. 1,20,000-மும் இருத்தல் வேண்டும்.

இந்தத் திட்டத்தில் பெண்களுக்கு 4 சதவீத வட்டி வீதத்திலும் ஆண்களுக்கு 5 சதவீத வட்டி வீதத்திலும் அதிகபட்சம் ரூ. 10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். விண்ணப்பதாரா் கோரும் கடன் தொகையில் 90 சதவீதம் தேசிய சிறுபான்மையினா்

வளா்ச்சி மற்றும் நிதிக்கழகம், 5 சதவீதம் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், மீதமுள்ள 5 சதவீதம் விண்ணப்பதாரரின் தொகையும் அடங்கும்.

கடன் திரும்ப செலுத்தும் கால அளவு 5 ஆண்டுகள் ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெறவிரும்புவோா் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT