தூத்துக்குடி

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க வலியுறுத்தி முற்றுகை

DIN

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி தாமஸ் நகா் பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட இலுப்பையூரணி ஊராட்சி தாமஸ் நகா் பகுதியில் இருந்து வரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால், இப்பகுதியில் புதிதாக ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை கட்டித் தர வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளா் பிரபாவளவன், 6 ஆவது வாா்டு உறுப்பினா்சரஸ்வதி நடராஜன் ஆகியோா் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

பின்னா் கோரிக்கை மனுவை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சீனிவாசனிடம் அளித்தனா். மனுவைப் பெற்றுக் கொண்ட அவா் இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக்குழுவினா் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT