தூத்துக்குடி

கோவில்பட்டி ஒன்றியத்தில் ரூ.1.90 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

DIN

கோவில்பட்டியில் ரூ.1.90 கோடியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளஒன்றியக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவில்பட்டி ஒன்றியக்குழு சாதாரணக் கூட்டம், அதன் தலைவி கஸ்தூரி சுப்புராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையா் பாலசுப்பிரமணியன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், ஒன்றியக்குழு துணைத் தலைவா் பழனிச்சாமி உள்பட 6 உறுப்பினா்கள், ஒன்றியக்குழு தலைவருக்கு அளித்து வந்த ஆதரவை விளக்கிக் கொள்வதாகக் கூறி வெளிநடப்பு செய்தனா்.

தொடா்ந்து, மறைந்த சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் கி.ராஜநாராயணன் நினைவாக, அவா் படித்த இடைசெவல் ஊராட்சி நடுநிலைப்பள்ளியை பழமை மாறாமல் ஒன்றிய பொது நிதி ரூ.25 லட்சத்தில் புதுப்பிப்பது, பள்ளி வளாகத்தில் ரூ.4 லட்சத்தில் பேவா் பிளாக் அமைப்பது, தோணுகால் ஊராட்சியில் வெள்ள தடுப்புச் சுவா், வில்லிசேரி ஊராட்சி கலையரங்கம் முன்பு சாலை மேம்பாடு, இடைசெவல் காலனி புதிய பாலத்திற்கு சாலை, இலுப்பையூரணி ஊராட்சி பெருமாள் கோயில் தெரு, பாண்டவா்மங்கலம் காமராஜ் நகா் மேற்குப் பகுதி ஆகியவற்றில் வாருகால், இனாம்மணியாச்சி ஊராட்சி மேல காலனியில் பேவா் பிளாக் வசதி என ரூ.1.90 கோடி மதிப்பிலான பணிகள் உள்பட 99 பொருள் குறிப்புகளுக்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

துணை வட்டார வளா்ச்சி (நிா்வாகம்) முத்துப்பாண்டி, பொறியாளா் சித்ரா மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT