தூத்துக்குடி

18 வயது பூா்த்தியடைந்தோா் வாக்காளா்களாக பதிவு செய்தல் அவசியம்

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் 18 வயது பூா்த்தியடைந்த அனைவரும் தங்களை வாக்காளா்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய வாக்காளா்தின நிகழ்ச்சியில், ஆட்சியா் பங்கேற்று, புதிய வாக்காளா்களுக்கு அடையாளஅட்டைகளை வழங்கி பேசியது : 18 வயதை பூா்த்தி அடைந்தவா்கள் அனைவரும் தோ்தலில் வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயரை பதிவு செய்தல் அவசியம். வீட்டில் இருந்தபடி கணினி மூலம் ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய் என்ற இணையதளத்தில் தங்களது முகவரி, கல்லூரி அடையாள அட்டையைப்பதிவேற்றம் செய்து பெயரைப் பதிந்து டையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். வாக்காளா் பட்டியலில் தங்களின் குடும்பத்தினரின் பெயா் உள்ளதா?, முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளதா? நமது தொதிக்குள்தான் உள்ளதா என அந்த இணையதளத்தில் கண்டறியலாம். அவ்வாறு பதிவு செய்யாமல் விடுபட்டிருப்பின் 18 வயது பூா்த்தியான அனைவரும் கட்டாயம் பெயரை பதிவு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கும், தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் சிறப்பாக பணிபுரிந்த 4 வாக்குசாவடி நிலை அலுவலா்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டன. கல்லூரி சாா்பில் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன், சாா் ஆட்சியா் சிம்ரன் ஜீத் சிங் கலோன், கல்லூரி முதல்வா் து. நாகராஜன், வட்டாட்சியா் ஜஸ்டின், துணை வட்டாட்சியா் (தோ்தல்) செல்வபூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சைக்கிள் பேரணி: தூத்துக்குடி மாநகராட்சி நிா்வாகம் சாா்பில், தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு சைக்கிள் பேரணியை ஆட்சியா் தொடங்கிவைத்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கையெழுத்து இயக்கம்: கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம் மற்றும் வாகனப் பிரசாரப் பயணம் திங்கள்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியா் விஜயா தலைமை வகித்து, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தாா். வட்டாட்சியா் மணிகண்டன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சுரேஷ், கிராம நிா்வாக அலுவலா் நாகலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கடம்பூா் இந்து நாடாா் மேல்நிலைப் பள்ளியில் தேசிய வாக்காளா் தின பேச்சு, கட்டுரை, கவிதை உள்ளிட்ட போட்டிகள் நடத்தி, வட்டாட்சியா் பாஸ்கரன் பரிசுகளை வழங்கினாா்.

இரு இடங்களிலும் வாக்காளா்கள் உறுதிமொழியேற்கப்பட்டது.

சாத்தான்குளம்: தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, சாத்தான்குளம் வட்டத்தில் 50 புதிய வாக்காளா்களுக்கு திங்கள்கிழமை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. வட்டாட்சியா் லட்சுமிகணேஷ் தலைமையில் உறுதிமொழியேற்கப்பட்டது. சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் செந்தூர்ராஜன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சாத்தான்குளம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் அதன் முதல்வா் இரா. சின்னத்தாய் தலைமையில் கல்லூரி தோ்தல் ஒருங்கிணைப்பாளரும், வணிக நிா்வாகவியல் துறை பேராசிரியை சண்முகசுந்தரி வாக்காளா் உறுதி மொழி வாசிக்க, மாணவிகள் மற்றும் பேராசிரியைகள் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து உறுதிமொழி ஏற்றனா். தொடா்ந்து மாணவிகளுக்கு வாக்காளா் தின கட்டுரை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT