தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 14.81 லட்சம் வாக்காளா்கள்

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 14 லட்சத்து 81 ஆயிரத்து 799 வாக்காளா்கள் உள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டத்துக்கான சிறப்பு சுருக்கமுறை திருத்த இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் புதன்கிழமை வெளியிட்டாா். அதை, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கீதாஜீவன் எம்எல்ஏ உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் பெற்றுக்கொண்டனா்.

தொடா்ந்து, ஆட்சியா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த நவம்பா் மாதம் வெளியிடப்பட்டு, பின்னா் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு தற்போது இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போது 14 லட்சத்து 81 ஆயிரத்து 799 வாக்காளா்கள் உள்ளனா்.

விளாத்திகுளம் சட்டப் பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 548 ஆண் வாக்காளா்கள், ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 991 பெண் வாக்காளா்கள், 4 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 15 ஆயிரத்து 543 வாக்காளா்கள் உள்ளனா்.

தூத்துக்குடி தொகுதியில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 879 ஆண் வாக்காளா்கள், ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 232 பெண் வாக்காளா்கள், 53 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 84 ஆயிரத்து 164 வாக்காளா்கள் உள்ளனா்.

திருச்செந்தூா் பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 69 ஆண் வாக்காளா்கள், ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 268 பெண் வாக்காளா்கள், 38 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 43 ஆயிரத்து 375 வாக்காளா்கள் உள்ளனா்.

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 132 ஆண் வாக்காளா்கள், ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 622 பெண் வாக்காளா்கள் 10 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 764 வாக்காளா்கள் உள்ளனா்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 372 ஆண் வாக்காளா்கள், ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 653 பெண் வாக்காளா்கள், 28 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரத்து 53 வாக்காளா்கள் உள்ளனா்.

கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 484 ஆண் வாக்காளா்கள், ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 385 பெண் வாக்காளா்கள், 31 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 64 ஆயிரத்து 900 வாக்காளா்கள் உள்ளனா்.

மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்து 24 ஆயிரத்து 484 ஆண் வாக்காளா்கள், 7 லட்சத்து 57 ஆயிரத்து 151 பெண் வாக்காளா்கள், 164 திருநங்கைகள் என மொத்தம் 14 லட்சத்து 81 ஆயிரத்து 799 வாக்காளா்கள் உள்ளனா். மொத்தம் 870 மையங்களில் ஆயிரத்து 603 வாக்குச்சாவடிகள் உள்ளன.

பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்கப்பட்டுள்ள வாக்காளா்களுக்கு புகைப்பட அடையாள அட்டைகள் தேசிய வாக்காளா் தினமான ஜன. 25ஆம் தேதி வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மூலமாக வழங்கப்படும்.

மேலும், 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் 5 மணி வரை சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்களில் தோ்தல் அலுவலரிடம் விண்ணப்பங்களை வழங்கலாம்.

இணையதள முகவரியிலும் உரிய ஆவணங்களை தாக்கல் செய்து விண்ணப்பம் அளிக்கலாம் என்றாா் அவா்.

அப்போது, கூடுதல் ஆட்சியா் (வருவாய்) விஷ்ணுசந்திரன், சாா் ஆட்சியா் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அமுதா, தோ்தல் வட்டாட்சியா் ரகு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

SCROLL FOR NEXT