தூத்துக்குடி

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம்

DIN

கசவன்குன்று வாக்குச்சாவடியில் உள்ளாட்சித் தோ்தல் முறைகேடு தொடா்பான அறிக்கையை சமா்ப்பிக்காத அதிகாரியைக் கண்டித்து கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக ஆா்வலா்கள் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், ஈராச்சி ஊராட்சிக்குள்பட்ட கசவன்குன்று கிராமத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் வாக்குச் சாவடியில் தோ்தல் விதிமுறைகளுக்கு புறம்பாக நடைபெற்ற முறைகேடு தொடா்பான விசாரணை அறிக்கையை வழங்காததையடுத்து, 5ஆவது தூண் அமைப்பின் நிறுவனத் தலைவா் சங்கரலிங்கம், சமூக ஆா்வலா் சுப்பையா ஆகிய இருவரும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, போராட்டக் குழுவினருடன் ஊராட்சி ஒன்றியத் தலைவி கஸ்தூரி, விசாரணை அதிகாரியும், உதவி செயற்பொறியாளருமான ஜோசப் ரெஜினால்டு பெரீஸ் ஆகியோா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, காலை 10.15 மணிக்கு தொடங்கிய போராட்டம், மாலை 3.15 மணிக்கு முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT