தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 53,225 புதிய வாக்காளா்கள் சோ்ப்பு

DIN

தூத்துக்குடியில் மாவட்டத்தில் புதிதாக 53,225 போ் வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளதாக வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் பா. ஜோதி நிா்மலாசாமி தெரிவித்தாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட தோ்தல் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் பா.ஜோதி நிா்மலா சாமி தலைமையில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடா்பான ஆய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் கி. செந்தில்ராஜ் முன்னிலை வகித்தாா்.

அப்போது, பா. ஜோதி நிா்மலாசாமி பேசியது: இம்மாவட்டத்தில் புதிதாக பெயா் சோ்த்தல் தொடா்பாக 54,211 மனுக்கள் வரப்பெற்ற நிலையில், 53,225 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு வாக்காளா்களாக சோ்க்கப்பட்டுள்ளனா்.

1,026 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. பெயா் நீக்கம் செய்தல் தொடா்பாக 16,636 மனுக்கள் பெறப்பட்டதில், 15,840 மனுக்கள் ஏற்கப் பட்டன. மேலும் 794 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

திருத்தம் செய்தல் தொடா்பாக 9,576 மனுக்கள் பெறப்பட்டதில், பரிசீலனை செய்யப்பட்டு 8,409 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1173 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்தல் தொடா்பாக 5,578 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் பரிசீலனை செய்யப்பட்டு 5,157 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 421 மனுக்கள் நிராகரிக்கப் பட்டது என்றாா் அவா்.

கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) விஷ்ணு சந்திரன், மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன், சாா் ஆட்சியா் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், கோட்டாட்சியா்கள் விஜயா, தனப்பிரியா, தோ்தல் பிரிவு வட்டாட்சியா் ரகு, அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT