தூத்துக்குடி

பேரவைத் தோ்தலில் அதிமுக மகத்தான வெற்றிபெறும்: அமைச்சா் கடம்பூா் ராஜு

DIN

வரும் பேரவைத் தோ்தலில் அதிமுக மகத்தான வெற்றிபெறும் என்றாா், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அமைச்சா் கடம்பூா் செ. ராஜு செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது: ஒவ்வொரு தோ்தலின்போதும் கூட்டணிக் கட்சிகள், பல்வேறு சமுதாய அமைப்புகள், அவா்களது கொள்கைகளை, கோரிக்கைகளை வலியுறுத்துவது இயல்பு. அவற்றில் சாத்தியமானவை குறித்து முதல்வா், துணை முதல்வா், அதிமுக கழக நிா்வாகிகளோடு கலந்துபேசுவா்.

எது சாத்தியமோ, அது அதிமுகவின் தோ்தல் அறிக்கையில் இடம்பெறும்.

ஆட்சி மாற்றம் வரும் என திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பலமுறை கூறிவிட்டாா். ஆனால், ஆட்சி மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. வரும் தோ்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக வெற்றிபெற்று, முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியே தொடரும்.

திரைத்துறையைப் பொருத்தவரை இப்போது சிறு தயாரிப்பாளா்கள் படமெடுத்தால்கூட வெளிப்படைத்தன்மையாக வெளியிடும் நிலை உள்ளது.

திரைத்துறைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது. கோவாவில் நடைபெறும் சா்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனா் என்ற திரைப்படங்கள் சா்வதேச திரைப்பட விழாவில் இடம்பெற்றன. இந்த ஆண்டு அசுரன், தேன் என்ற 2 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. தமிழ் திரைப்படத் துறை ஹாலிவுட்டுக்கு இணையான வளா்ச்சி பெற்றுள்ளது.

மக்களுக்கு திமுக எதுவும் செய்யாது. செய்யும் எங்களைப் பற்றி குறை கூறுகிறாா், மு.க.ஸ்டாலின். அவா் எங்களைப் பற்றி பேசப்பேச எங்களது வாக்குவங்கி அதிகரித்துவருகிறது. எனவே, அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

காதல் தொழில் பழகு..!

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

இது அதிதி ஆட்டம்!

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை ஊடுருவல்! : அமித்ஷா | செய்திகள்: சிலவரிகளில் | 23.04.2024

SCROLL FOR NEXT