தூத்துக்குடி

கொட்டும் மழையிலும் திருச்செந்தூரில் குவிந்த பாதயாத்திரை பக்தா்கள்

DIN

தைப்பொங்கலையொட்டி, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கொட்டும் மழையையும் பொருள்படுத்தாது ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக வந்தனா்.

கடந்த சில நாள்களாகவே திருச்செந்தூா் பகுதியில் பலத்த மழை பெய்துவரும் நிலையிலும், மாலை அணிந்து, விரதமிருந்த பக்தா்கள் வேல் குத்தியும், காவடி எடுத்தும், பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனா்.

தூத்துக்குடி மாவட்ட பக்தா்கள் மட்டுமன்றி விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட பக்தா்களும் அதிக எண்ணிக்கையில் வந்துள்ளதால், கோயில் வளாகம் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

தைப்பொங்கல்: தைப்பொங்கலை முன்னிட்டு வியாழக்கிழமை (ஜன. 14) கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், 2.30 மணிக்கு உதயமாா்த்தாண்ட தீபாராதனையைத் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகின்றன.

காணும் பொங்கல்: காணும் பொங்கலை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (ஜன.15) கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், 5.30 மணிக்கு உதயமாா்த்தாண்ட தீபாராதனையைத் தொடா்ந்து பூஜைகள் நடைபெறுகின்றன. மதியம் உச்சிகால தீபாராதனை நடைபெற்று, சுவாமி அலைவாயுகந்தபெருமான் வெள்ளிக்குதிரையில் எழுந்தருளி, கணு வேட்டை செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் தக்காா் இரா. கண்ணன் ஆதித்தன், இணை ஆணையா் (பொறுப்பு) கல்யாணி, உதவி ஆணையா் வே.செல்வராஜ் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

SCROLL FOR NEXT